கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அரசியலை புறம்தள்ள வேண்டும்: அமைச்சர் ஹர்ஷவர்தன்

0 1120
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அரசியலை புறம்தள்ள வேண்டும்: அமைச்சர் ஹர்ஷவர்தன்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அரசியலை புறம்தள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன என்றார்.

கொரோனா தடுப்பூசிக்கு பின்னுள்ள அறிவியலை மக்கள் நம்ப வேண்டும் என்று கூறிய அவர்,  மக்கள் தங்களுக்கு நெருக்கமான- அன்புக்குரியவர்கள் ஒவ்வொருவரும் குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments