கொரோனா பரவல் அதிகரிப்பு: பஞ்சாப், மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரிப்பு: பஞ்சாப், மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் அருகே உள்ள சம்பாஜி நகர் பகுதியில் வரும் 11ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இரவு நேரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திருமண அரங்குகள் மூடப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று உயர்ந்து வருவதால் ஜலந்தரில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
Comments