சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ஆத்திரம்: காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக அமைச்சர்

0 3113
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக அமைச்சர்

அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அம்மாநில பாஜக அமைச்சர் ஒருவர் காங்கிரசில் இணைந்துள்ளார்.

அஸ்ஸாமில் மலைப்பகுதி வளர்ச்சி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராக இருப்பவர் ரோங்ஹாங். தற்போது அங்கு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து ரோங்ஹாங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் மாநிலத் தலைவர் ரிபுன் போரா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ரோங்ஹாங், பாஜகவில் சிலரின் சதி காரணமாக தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் அவர் திபு தொகுதியில் களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments