"இந்தியாவும் சீனாவும் நண்பர்கள்" -சீன வெளியுறவுத்துறை அதிகாரி ட்வீட்..!
இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் என சீன வெளியுறவுத்துறை அதிகாரி ட்வீட்
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான மோதலால் எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதே சரியான வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவரும் நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ள ஹூவா இருவருமே வெற்றி பெறுவதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments