அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்...

0 5518
அதிமுக - தேமுதிக இடையே இன்று உடன்பாடு ? அதிமுக 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?

அதிமுக- தே.மு.தி.க. இடையே இன்று தொகுதி உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மூன்று கட்டப் பேச்சுக்குப் பிறகும் தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. தேமுதிக 23 தொகுதிகள் கேட்பதாகவும், 17 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

 அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. த.மா.கா.வுக்கு எத்தனை இடங்கள் என்பதும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதனிடையே, அ.தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இன்று இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுகவில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட குழு, தனது வரைவு தேர்தல் அறிக்கையை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.சிடம் சர்மப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை பரிசீலித்து தேர்தல் அறிக்கையை இறுதி செய்யும் பணியையும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments