இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்.!

0 4748
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்.!

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில், தொலைநோக்குத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் 7 உறுதி மொழிகள் என்ற தலைப்பில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மக்களை பிளவுபடுத்துபவர்களை தோற்கடிப்போம் என்றும், 100 சதவித ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஸ்டாலின் கூற, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக மேடைக்கு வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூர அளவிற்கான, பிரத்தியேக நடைமேடையில் நடந்து சென்று, தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களின் வாழ்த்து முழக்கங்களை ஏற்றார்....

பொதுக்கூட்ட நிறைவில் மேடை அருகே வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments