சென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு

0 4138
சென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு

சென்னை மாநகரில் கடந்த சில தினங்களாக உயர்ந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்துள்ளது.

கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததால், தமிழகத்திலும் பாதிப்பு உயர்ந்தது. சென்னையிலும் கடந்த வியாழன் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஆனால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுகாதாரத்துறை அறிவிப்பில், வைரஸ் தொற்று பாதிப்பு தணிந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், இதுவரை நலமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 708 பேராக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments