மியான்மரில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என தன் உயிரைப் பொருட்படுத்தாமல் போலீசாரிடம் மன்றாடிய கன்னியாஸ்திரி

0 1770

மியான்மரில் போலீசாரிடம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் என கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மிட்கினா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் அணிவகுத்து சென்ற போது, ஆன் ரொசா (Ann Roza) என்ற கன்னியாஸ்திரி போலீசாரிடம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டாம் எனக் கை கூப்பி கெஞ்சியும், முழங்காலில் மண்டியிட்டும் மன்றாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments