ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்.! திமுக தொலைநோக்குத் திட்டம்.!

0 10974
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்.! திமுக தொலைநோக்குத் திட்டம்.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம்; ஆனால், பிரம்மாண்ட மாநாடாகவே நடைபெறுகிறது: மு.க.ஸ்டாலின்

மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை உருவாக்கிக் கொடுத்தது திருச்சி மாநகரம் தான்: மு.க.ஸ்டாலின்

மத்தியிலே கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி பெற்று இருந்தது: மு.க.ஸ்டாலின்

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என திமுக ஆட்சியில் பெயர் மாற்றம்: மு.க.ஸ்டாலின்

வருகிற மே மாதம் 2ஆம் தேதி தமிழகத்தின் பூபாளமாக திமுக ஆட்சி மலரும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்: மு.க.ஸ்டாலின்

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்: மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினின் 7 உறுதிகள்... இலக்குகள்....

பொருளாதாரம், நீர்வளம், வேளாண்மை, கல்வி & சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி

பொருளாதார இலக்கு: "வளரும் வாய்ப்பு, வளமான தமிழ்நாடு" என்ற தலைப்பில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்

திமுக வகுத்துள்ள பொருளாதார இலக்கை எட்டுமானால், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.4 லட்சமாக மாறும்

அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்

வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதி

வேளாண்மை இலக்கு: அடுத்த பத்தாண்டுகளில் வேளாண் உற்பத்தி சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டேராக மாற்றப்படும்

கல்வி & சுகாதாரம்: அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கை எட்டுவோம்

நகர்புற வளர்ச்சி இலக்கு: அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டம் உறுதி செய்யப்படும்

நகர்புற வளர்ச்சி இலக்கு: தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில், அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்

அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் உடன் கூடிய இணைய வசதி ஏற்படுத்தித் தரப்படும்

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி

  • ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்
  • ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி கல்வி உதவித் தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்
  • மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
  • 35 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் வகையில், தமிழ்நாட்டின் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்
  • ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையின்மையை ஒழிக்க நடவடிக்கை
  • கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வசதி வழங்கப்படும்
  • எந்த வானிலைக்கு அசைந்து கொடுக்காத வகையில் தரத்துடன் கூடிய சாலைகள் அமைக்கப்படும்
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments