75 ஆயுர்வேத மருந்துகளை மக்கள் மருந்தகங்களில் விற்க முடிவு - பிரதமர் மோடி

0 1203
மக்கள் மருந்தகங்களில் 75 வகையான ஆயுர்வேத மருந்துகளை விற்க முடிவெடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்கள் மருந்தகங்களில் 75 வகையான ஆயுர்வேத மருந்துகளை விற்க முடிவெடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் 7500ஆவது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மக்கள் மருந்தகங்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

சானிட்டரி நாப்கின்களும் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டமளிக்கும் மருந்துகளும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட மருந்தகங்கள் பெண்களால் நடத்தப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments