தெலங்கானாவில் சங்கிலித் தொடர் முதலீடு மூலம் ரூ.1,250 கோடி மெகா மோசடி: 24 பேர் கைது

தெலங்கானாவில் சங்கலி தொடர் முதலீட்டின் மூலம் ஆயிரத்து 250 கோடி ரூபாய் வசூல் செய்து, மெகா மோசடியை அரங்கேற்றிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அம் மாநிலத்தில் பைசராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் சஜ்ஜனார், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய சிந்து விவா ஹெல்த் சயின்சஸ் என்ற நிறுவனம் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் சுமார்10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருநதது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக சுமார் 20 கோடி ரூபாய் வரை, பறிமுதல் செய்த காவல்துறையினர், இந் நிறுவனத்தின் C.E.0 உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர். இவர்களில் தெலங்கானா அரசு ஊழியர்கள் மூவரும், அவர்களது மனைவிகளும் அடங்குவர். தலைமறைவான இந் நிறுவனத்தின் உரிமையாளர்கள் அபிலாஷ் தாமஸ் மற்றும் பிரேம்குமார் இருவரையும் பிடிக்க சைபராபாத் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
Comments