கார் முதல் கனரக வாகனங்கள் வரை 14 ஆண்டுகளாக விபத்தில்லா சேவை வழங்கி வரும் பெண் ஓட்டுநர்

0 7373
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் முதல் கனரக வாகனம் வரை இயக்கி அசத்தும் பெண் ஒருவர், அரசுப் பேருந்து ஓட்டுநராவதே தனது இலக்கு என கூறி வருகிறார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் முதல் கனரக வாகனம் வரை இயக்கி அசத்தும் பெண் ஒருவர், அரசுப் பேருந்து ஓட்டுநராவதே தனது இலக்கு என கூறி வருகிறார்.

உமையத்தலைவன்பட்டியைச் சேர்ந்த சீனித்தாய், எட்டாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில், அந்தப் பணியில் ஆர்வம் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்று கடந்த 14 ஆண்டுகளாக தனியார் நூற்பாலையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

அனைத்து வகையான கனரக வாகனங்களையும் இயக்குவேன் எனக் கூறும் சீனித்தாய், அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்து காத்திருப்பதாகக் கூறுகிறார்.

மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ள சீனித்தாய், பெண்கள் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி கனரக வாகனங்களை இயக்குவதற்கு முன்வர வேண்டும் என்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments