அமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் மோடி பேச்சு

0 2006
அமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் மோடி பேச்சு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்குப் பதில் மக்களை மதத்தின் பெயரில் பிரித்தாள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இன்றைய கூட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமைதி நிலவும் பொற்கால வங்கத்தை மக்கள் விரும்புவதாகவும், அவர்களின் கனவை பாஜக நனவாக்கும் என்றும் தெரிவித்தார்.

வங்கத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் அடித்தளமிட வேண்டும் எனக் குறிப்பிட்டார். திரிணாமூல் ஆட்சியில் சீர்குலைந்துள்ள ஜனநாயக அமைப்பு முறை, பாஜக ஆட்சிக்கு வந்தால் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்தார். பத்தாண்டுகளாகத் திரிணாமூல் ஆட்சியில் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை எனக் குறைகூறினார்.

தான் வறுமையில் வளர்ந்ததால் ஏழைகளின் துன்பத்தை உணர்ந்துள்ளதாகவும், அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் ஊழல் மலிந்துள்ளதாகவும், அம்பன் புயல் நிவாரண நிதியைக் கூடச் சுருட்டிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments