குடும்ப தகராறில் மதுபாட்டிலை அரைத்து பாலில் கலந்து காவலரின் மனைவி, 2 மகள்களுடன் தற்கொலை முயற்சி

0 941
சென்னையில் குடும்ப தகராறில், காவலரின் மனைவி, மதுபாட்டிலை அரைத்து பாலில் கலந்து 2 மகள்களுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் குடும்ப தகராறில், காவலரின் மனைவி, மதுபாட்டிலை அரைத்து பாலில் கலந்து 2 மகள்களுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலரான இளங்கோவன் குடிபோதைக்கு அடிமையானதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்ததாகக் கூறப்படுகிறது.

குடும்ப கஷ்டத்துக்காக தெரிந்த நண்பரிடம் மனைவி 30ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், அதனை திருப்பி செலுத்தாதாலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மனைவி மதுபாட்டிலை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து 2 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், கடும் வயிற்று வலி ஏற்படவே, மகள்களுடன் தானே சென்று மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments