"விடியலுக்கான முழக்கம்" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளில் மு.க.ஸ்டாலின்.!

0 3547
"விடியலுக்கான முழக்கம்" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளில் மு.க.ஸ்டாலின்.!

திருச்சி சிறுகனூரில் "விடியலுக்கான முழக்கம்" என்ற பெயரில் திமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு மார்ச் 14-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதே இடத்தில் பிரம்மாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் பார்வையாளர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பந்தலின் வலது மற்றும் இடது புறத்தில் சுமார் நூறு மீட்டர் தூரத்துக்கு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியே ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் 300 ஏக்கரில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல் திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments