ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3 - 2 என்கிற கணக்கில் கைப்பற்றியது நியூசிலாந்து

0 1563
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி மூன்றுக்கு இரண்டு என்கிற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

ஏற்கெனவே நடந்த நான்கு இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் இரண்டு வெற்றிகளைப் பெற்றுச் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில் வெலிங்டனில் நடந்த ஐந்தாவது இருபது ஓவர் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 15 புள்ளி மூன்று ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

71 ரன்கள் குவித்து வெற்றிக்குக் காரணமாக இருந்த மார்ட்டின் குப்தில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments