சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 2500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய வழித்தட பாதை திறப்பு

0 4318
சென்னை விமான நிலையத்தில் 2,500 சதுர மீட்டரில் பயணிகள் புதிய வழித்தட பாதை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 2,500 சதுர மீட்டரில் பயணிகள் புதிய வழித்தட பாதை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகை பகுதியில், பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே செல்ல 2 பாதைகள் இருந்தன.

இதை ஒரே வழித்தட பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டு 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய வழித்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், பயணிகள் சிரமமின்றி விமான முனையத்தை விட்டு வெளியேறவும், புறப்பாடு பயணிகள் விமானங்களுக்கு விரைவாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பயணிகள் வசதிக்காக லிப்ட், எஸ்கலேட்டர், நவீன கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஒரு விமானத்தில் வந்து மற்றொரு விமானத்தில் மாறி செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கும் இந்த புதிய வழித்தட பாதை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments