ரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்..!

0 2002
ரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்..!

ரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வினேஷ் போகத் கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று இறுதிச் சுற்றில் கனடாவின் டயானா மேரி ஹெலனை நான்குக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார்.

அத்துடன் 53 கிலோ எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments