வேதாரண்யத்தில் கடலில் மிதந்து வந்த பாட்டில்..! சாராயம் என நினைத்துக் குடித்த 3 மீனவர்கள் பலி

0 2820
வேதாரண்யத்தில் கடலில் மிதந்து வந்த பாட்டில்..! சாராயம் என நினைத்துக் குடித்த 2 மீனவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை சாராயம் என நினைத்து குடித்த 3 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோடியக்கரையில் இருந்து கடந்த 1ஆம் தேதி கடலில்தங்கி மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்ததை, சாராயம் என எண்ணிய மூன்று மீனவர்கள் அதனை குடித்துள்ளனர்.

குடித்த சிறிது நேரத்தில் மூவரும் மயக்கமடைந்ததால், பதற்றமடைந்த சக மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். ஆனால் அதற்குள் அந்தோணிராஜ் என்பவர் உயிரிழந்தார். மற்ற இரு மீனவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments