வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

0 9841
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

ளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 9-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments