என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியா? மௌனம் காக்கும் ரங்கசாமி

0 1096
என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியா? மௌனம் காக்கும் ரங்கசாமி

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு, முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதால், தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் என்.ஆர்.காங்கிரசுக்கும், 10 தொகுதிகள் பா.ஜ.க.வுக்கும், 6 தொகுதிகள் அதிமுகவுக்கும் என முதலில் பேசப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த என்.ஆர்.காங்கிரஸ் தங்களுக்கு 16 தொகுதிகள் வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியதோடு, முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க வலியுறுத்தியது. இதனால், 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி நீடிக்கிறது.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை பலம் என கருதும், பா.ஜ.க. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறது. வருகிற 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் சூழலில், அதற்குள் பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி உடன்பாடு செய்ய பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், தற்போதுவரை பா.ஜ.க.வுடனான கூட்டணியை என்.

ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உறுதி செய்யாமல் மவுனம் காத்து வருவதாக சொல்லப்படுகின்றது. இன்னும், சில நாட்களில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியா அல்லது தனித்து போட்டியா என அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. வின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, ஓரிரு நாட்களில் என்.ஆர்.காங்கிரசுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கூட்டணியில் பிளவு இல்லை என்றும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments