பணி நேரத்தை மாற்றிக்கொடுக்க உயரதிகாரிகள் மறுத்ததால், கைக்குழந்தையுடன் போக்குவரத்து பணியில் ஈடுபடும் சண்டிகர் பெண் காவலர்

0 15032
சண்டிகரில் பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சண்டிகரில் பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

சண்டிகர் நகர போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றிவரும் பிரியங்காவுக்கு, கைக்குழந்தை உள்ளது. அவருக்கு காலை 8 மணி முதல் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி போடப்பட்டது.

கைக்குழந்தை இருப்பதால் காலை நேரத்தில் பணிக்கு வரமுடியாது என்றும், நேரத்தை மாற்றி கொடுக்குமாறும் உயரதிகாரிகளிடம் கேட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு நேரத்தை மாற்றிக்கொடுக்க அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments