நீலகிரியில் சாலையில் கம்பீரமாக உறுமலுடன் உலா வந்த புலி..!
நீலகிரியில் சாலையில் கம்பீரமாக உறுமலுடன் உலா வந்த புலி..!
நீலகிரி மாவட்டம் குன்னூர்- கோத்தகிரி சாலையில் புலி ஒன்று கம்பீரமாக நடைபோடும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
நேற்றிரவு பெல்மவுண்ட் பகுதியில் புலி ஒன்று உறுமியவாறு சாலையில் அங்குமிங்கும் நடந்து சென்றது. இதனை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் அச்சத்துடன் தங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த புலி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
Comments