காணொலி மூலம் நடந்த விசாரணையின் குறுக்கே உணவு சாப்பிட்ட வழக்கறிஞர்..!

0 2077
காணொலி மூலம் நடந்த விசாரணையின் குறுக்கே உணவு சாப்பிட்ட வழக்கறிஞர்

பீகார் மாநிலத்தில் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்ற விசாரணை நடந்த போது வழக்கறிஞர் ஒருவர் உணவு சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் ஷத்ரஷால் ராஜ் என்பவர் வழக்கு விசாரணைக்காக ஜூம் வீடியோ செயலியை ஆன் செய்து அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் வீடியோ முன் அமர்ந்திருப்பதை மறந்து போன அவர், சிற்றுண்டி சாப்பிடத் தொடங்கினார்.

அப்போது ஆன்லைனில் வந்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குறிப்பிட்ட வழக்கறிஞரிடம் கேள்வி கேட்க, அவரோ சாப்பிடுவதில் பிஸியாக இருந்தார்.

பின்னர் ஷத்ரஷாலின் செல்போனுக்கு துஷார் மேத்தா போன் செய்த போதுதான் அந்த வழக்கறிஞருக்கு ஆன்லைனில் இருப்பது உரைத்தது. பின்னர் சிற்றுண்டியை மறைத்து வைத்து மீண்டும் வழக்கில் கவனத்தைச் செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments