ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி

ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி
ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தடுப்பூசி பதிவிற்காக, 'கோவின் - 2' வலைதளத்தில், ராணுவ மருத்துவமனைகளை பதிவு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்ததும், அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கும்.
தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று மத்திய சுகாதாரத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments