உலகின் மிகப் பெரிய கடற்படையை சீனா உருவாக்குவதாக அமெரிக்கா தகவல்..!

உலகின் மிகப் பெரிய கடற்படையை சீனா உருவாக்குவதாக அமெரிக்கா தகவல்..!
உலகின் மிகப் பெரிய கடற்படையைக் கட்டமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் தந்தை எனப்படும் மா சே துங்கிற்கு பின் தன்னை ஒரு வலிமை மிகுந்த தலைவராக தற்போதைய அதிபர் ஷி ஜின் பிங் காட்டிக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க கடற்படை புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்காக உலகின் மிகப் பெரிய கடற்படையை உருவாக்கும் பணியில் சீனாவை அவர் ஈடுபடுத்தியிருப்பதாகவும், கடந்த 2015ம் ஆண்டில் 255 போர்க்கப்பல்களை வைத்திருந்த நிலையில் 2020ம் ஆண்டு 360 கப்பல்களை கட்டியுள்ளதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
இது அமெரிக்காவை விட 60 கப்பல்கள் அதிகம் என்றும் அடுத்த 4 ஆண்டுகளில் சீன போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்து விடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments