மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி..! 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிக்க இருப்பதாக பேச்சு

நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி..! 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிக்க இருப்பதாக பேச்சு
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி தேர்தலில் போட்டியிடுகிறார்.
அம்மாநிலத்தில் வரும் 27ம் தேதி மற்றும் ஏப்ரல் 1ம் தேதி ஆகிய இரு நாட்களில் நடக்கும் தேர்தலின் போது போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
இதில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, திரிணாமூல் காங்கிரசில் இருந்து வெளியேறிய சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார்.
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிக்காவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக சுவேந்து அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments