கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம்..!

0 2619
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம்..!

ன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்கிறார்.

கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு நேற்றிரவு வந்த அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார்.

கார் மூலம் நாகர்கோவில் செல்லும் அவர், காலை 10.45 மணிக்கு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

பகல் 12.15 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு காமராஜர் சிலை வரை வாக்கு சேகரிக்கும் அவர், தொடர்ந்து 12.30 மணி முதல் 2 மணி வரை நாகர்கோவில் வடசேரியில் உள்ள உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments