தமிழக கொரோனா நிலவரம்: 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை

0 5222
தமிழக கொரோனா நிலவரம்: 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் 2- வது நாளாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  562 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில், பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  560 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை, 8 லட்சத்து 54 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 4- வது இடம் வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments