ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
சென்னையில் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதித் திட்டம்: 2 இளைஞர்கள் கைது

தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதித் திட்டம்: 2 இளைஞர்கள் கைது
சென்னை பெரம்பூர் பகுதியில் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி இரவு பெரம்பூர் - பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையம் இடையே ரயில் தண்டவாளத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்கள் குறித்த காட்சி, CCTV - யில் பதிவாகி இருந்தது.
நாசவேலையில் ஈடுபட்டது வியாசர்பாடிஅலேக்ஸ், பெரம்பூர் பாலாஜி என்பதை உறுதி செய்த ரயில்வே பாதுகாப்பு படை இருவரையும் கைது செய்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட இருவரும், சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப் பட்டனர்.
Comments