திருச்சியில் தி.மு.க. மாநாடு... முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்

0 2831
திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். அந்த கூட்டத்திற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். அந்த கூட்டத்திற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் தி.மு.க. சார்பில் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட்டம் நடைபெற உள்ளது.

அங்கு 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மாநாடு பந்தலும், விசாலமான வாகன நிறுத்துமிடங்களும் தயாராகி உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

விடியலுக்கான முழக்கம் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. அங்கு ஒரு பிரமாண்ட மேடையும், 2 சிறிய மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேடையின் இரு பக்கங்களிலும் 300 அடி நீள அகன்ற எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 அடி கொடிக்கம்பம் கிரேன் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அன்று 11 மணிக்கு திருச்சிக்கு விமானம் மூலம் வருகிறார்.

பின்னர் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு மதியம் 1 மணி அளவில் பொதுக்கூட்ட திடலுக்கு வருகிறார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

பிற்பகல் 2 மணி முதல் தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். அதற்கு முன்பாக தி.மு.க.வின் கண்காட்சி தொடங்கி வைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மாலை 4 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

இரவு 7 மணிக்கு பேசத் தொடங்கும் ஸ்டாலின் தி.மு.க.வின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்ட அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments