திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்

0 20849
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கொரோனா சான்றை கொண்டு வர வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவகர்ரெட்டி,
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அடுத்த மாதம் 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும் என்றார்.

சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்று அவர் கூறினார். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments