மேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்

மேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்
மேற்குவங்கத்தில், நாட்டு வெடிகுண்டு தாக்குதலில், பாஜகவினர் 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் இரண்டு பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும்போது, சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவது பற்றி விசாரித்து வருவதாக கூறினர்.
ஆனால், காயமடைந்தவர்கள் தரப்போ, ஆளும் டி.எம்.சி கட்சியினரே காரணம் என புகார் தெரிவித்துள்ளனர்.
Comments