டெல்லி பள்ளிகளுக்கு என்று தனி பள்ளிக்கல்வி வாரியம் -முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 பள்ளிகளுக்கு என்று தனியாக பள்ளிக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 பள்ளிகளுக்கு என்று தனியாக பள்ளிக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி போர்டு ஆஃப் ஸ்கூல் எஜுகேஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாரியத்தில் முதற்கட்டமாக மாநில அரசின் 22 பள்ளிகள் இணைக்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்த வாரியம் அமைக்க டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. டெல்லியில் தற்போது சுமார் 1000 அரசு பள்ளிகளும், சுமார் 1700 தனியார் பள்ளிகளும் உள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது சிபிஎஸ்இ-உடன் இணைக்கப்பட்டுள்ளன.
டெல்லி பள்ளிக் கல்வி வாரியத்திற்கு என்று தனியாக ஆட்சிக் குழு அமைக்கப்பட்டு அதற்கு டெல்லி கல்வி அமைச்சர் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments