புதுச்சேரி: 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வலியுறுத்தும் என்.ஆர்.காங், நிர்வாகிகள்

0 1442
புதுச்சேரி: 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வலியுறுத்தும் என்.ஆர்.காங், நிர்வாகிகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 தொகுதிகள் கேட்கும் என்.ஆர்.காங்கிரசை, 14 தொகுதிகளில் போட்டியிடுமாறு பா.ஜ.க. கோரி வருகிறது. அத்துடன், முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்கவும் பாஜக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய அமைச்சர் அமித்ஷா வருவதற்குள் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments