பில்களில் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என முத்திரையிட தேர்தல் ஆணையம் ஏற்பாடு

0 1053
கடைகளில் பொருட்கள் வாங்கியதற்கான பில்லில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை முத்திரையிடத் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடைகளில் பொருட்கள் வாங்கியதற்கான பில்லில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை முத்திரையிடத் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்திகளில் விளம்பரம் செய்வது வழக்கம்.

இந்தச் சட்டமன்றத் தேர்தலையொட்டிச் சென்னையில் தேர்தல் அதிகாரிகள் புது உத்தியைக் கையாண்டு வருகின்றனர்.

நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என பில்களில் அச்சிடும் முத்திரைகளைச் சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளுக்கு வழங்கினர்.

ஒவ்வொரு பில்லிலும் இந்த முத்திரையிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments