இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்சில் 365 ரன்களை குவித்தது இந்தியா..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; முதல் இன்னிங்சில் 365 ரன்களை குவித்தது இந்தியா..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் சேர்த்தது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் சதம் அடித்தார்.
இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் சேர்த்தார்.
Comments