2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை

0 4161
2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை

இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் எடப்பாடி, போடிநாயக்கனூர், இராயபுரம், விழுப்புரம், திருவைகுண்டம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

பிற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அதிமுக தலைமையகத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, தமிழ்மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆலோசனைக்குப் பின் மீதமுள்ள தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments