ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான வரும் திங்கள் கிழமை துவக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு 41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் 10 நாப்கின்கள் வீதம் ஆண்டொன்றுக்கு 120 நாப்கின்கள் வழங்கப்படும்.
Comments