கூவத்தூரில் நடந்தது என்ன.? போட்டுடைக்கும் கருணாஸ்.!

0 5546
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை கட்சி; தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டி- நடிகர் கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸ், 2017ஆம் ஆண்டு கூவத்தூரில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

கடந்த முறை, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட கருணாசுக்கு இம்முறை அதிமுகவிலிருந்து அழைப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்தச்சூழலில், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர், நடிகர் கருணாஸ் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் அவசர, அவசரமாக உள் இட ஒதுக்கீடு வழங்கியதால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து, திடீரென, தாம் கடந்து வந்த அரசியலை பின்நோக்கி திரும்பி பார்த்த கருணாஸ், கடந்த 2017ஆம் ஆண்டு, கூவத்தூரில், ரிசார்ட்டுக்குள் நடைபெற்ற சம்பவத்தை விவரித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். சரக்கு முதல் சத்தியம் வரையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியை அவர் விவரிக்கத் தவறவில்லை

ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், 20 தொகுதிகள் கொடுத்தாலும், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மட்டோம் எனக்கூறியதோடு, 84 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments