பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை? 34 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடம் வழங்கியது பாஜக

0 6879
பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் எவை? 34 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளது பாஜக

திமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒரு மக்களவை தொகுதியோடு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 34 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து, அதில் 20 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது.

எந்தெந்த தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்பட்டது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த சில தொகுதிகளை பா.ஜ.க. கோரி வருவதால் இழுபறி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 34 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை அதிமுகவிடம் வழங்கி அதிலிருந்து 20 தொகுதிகளை பா.ஜ.க. கோரியுள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கொங்கு மண்டலங்களில் ராசிபுரம், பவானி, திருப்பூர், கோவை தெற்கு, சூலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments