திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஆர்ஜித சேவையில் தரிசிக்க ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து வர வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

0 1016
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் ஆர்ஜித சேவையில் தரிசிக்க ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து வர வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொண்டு, வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையின்போது தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மார்ச் 15-ஆம் தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள அதற்கான டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தர்கள் 72 மணிநேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவுடன் திருமலைக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments