பெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..!

0 8276

ர்மபுரியில், வீடு கட்ட நிலம் கொடுத்த தாய் - தந்தையை, வீடு கட்ட பணம் கொடுக்கவில்லை என்று கூறி, குடி போதையில் மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் ராமச்சந்திரன் ( 65) - சின்னராஜி (60). இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இதில் ராமச்சந்திரனின் மகன் ராமசாமி கடைவைத்து, இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வந்தார். ராமச்சந்திரனின் மகள் சுமதி பென்னாகரம் அருகேயுள்ள பி.அக்ராகரம் பகுதியில் தன் கணவரோடு வசித்து வருகிறார்.

பூச்செட்டிஅள்ளியில் ராமச்சந்திரன் மற்றும் சின்னராஜி ஒரு வீட்டிலும், அவர்களின் வீட்டுக்கு அருகே ராமசாமி தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வேறொரு வீட்டிலும் என்று தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், தாயார் சின்னராஜி தன் பெயரிலிருந்த நிலம் ஒன்றைப் பிரித்து மகனுக்கும் மகளுக்கும் வீடு கட்ட கொடுத்துள்ளார். அந்த நிலத்தில், சுமதி புதிதாக வீடு கட்டி வருகிறார். ஆனால், ராமசாமியால் வீடுகட்ட முடியவில்லை.

தன் சகோதரியைப் போல தானும் அந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று கூறி, நிலம் கொடுத்த தாய் - தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துவந்தார் ராமசாமி. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று இரவு குடித்துவிட்டு, போதையேறி வீட்டுக்கு வந்த ராமசாமி தனது தாய் சின்னராஜியிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமசாமி தனது கடையிலிருந்த இரும்பு ராடை எடுத்து வந்து, தாய் சின்னராஜியின் தலையில் அடித்துள்ளார். அதில், சின்னராஜியின் மண்டை உடைந்தது. அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சின்னராஜியின் அலறல் கேட்டு ஓடி வந்த தந்தை ராமச்சந்திரனையும் அதே ராடால் அடித்துள்ளார் ராமசாமி. இந்தக் கொடூர தாக்குதலில், தாய் தந்தை இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறகு, போதை தெளிந்ததும் மெக்கானிக் ராமசாமி இண்டூர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடு கட்ட பணம் கேட்டு பெற்ற தாய் தந்தையரையே இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கொடூரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments