மதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல்; திமுக - மதிமுக இடையே இன்று மாலை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

0 3485
மதிமுகவுக்கு 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல்

திமுக - மதிமுக இடையேயான 3-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.

முதல் 2 கட்ட பேச்சுவார்த்தையின் போது, தனிச்சின்னத்தில் போட்டியிடும் வகையில் 10 தொகுதிகளை ஒதுக்குமாறு மதிமுக வலியுறுத்தியது. ஆனால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக முதல் 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்பாடாமல் இருந்தது. இந்த நிலையில், 3-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மதிமுகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவை மதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments