கூட்டணிக்கு 8ந் தேதி கடைசி நாள்: கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய மு.க. ஸ்டாலின் உத்தரவு?

0 2258
கூட்டணிக்கு 8ந் தேதி கடைசி நாள்: கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைந்து இறுதி செய்ய மு.க. ஸ்டாலின் உத்தரவு?

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை 8-ந் தேதிக்குள் இறுதி செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இதுவரை நான்கு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசிக, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வருகிற 10-ந் தேதி திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு வசதியாக, 8-ந் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments