சாலை விபத்துகளைத் தடுக்க டெல்லி அரசு புதிய நடவடிக்கைகள்; விபத்தில் உயிரிழப்புகளைத் தவிர்க்க பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சாலை விபத்துகளைத் தடுக்க டெல்லி அரசு புதிய நடவடிக்கைகள்; விபத்தில் உயிரிழப்புகளைத் தவிர்க்க பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்
டெல்லியின் முக்கிய சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மேம்படுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
சாலைப் பாதுகாப்பில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், தேவையான தொழில் நுட்ப உதவிகளையும் வழங்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புளூம் பர்க் பிலான்திராபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கெஜ்ரிவால் அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிபுணர்கள் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை டெல்லி அரசுக்கு வழங்குவார்கள்.
இதன் மூலம் சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்று இலக்கு வகுத்துள்ள உலகின் 30 நாடுகள் பட்டியலில் டெல்லியும் சேர்ந்துள்ளது.
Comments