அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டது பாஜக

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டது பாஜக
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
மஜூலி தொகுதியில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலும், நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியிலும், மாநில பாஜக தலைவர் ரஞ்சீத் தாஸ் படச்சர்குச்சி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 92 தொகுதிகளிலும், அசாம் கண பரிசத் 26 தொகுதிகளும், மக்கள் விடுதலைக் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Comments