பேத்தி என பாட்டியை சிதைத்த கஞ்சா காமுகன்..! திறந்த வீட்டால் விபரீதம்
சென்னை ராயப்பேட்டையில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கிய மூதாட்டியை கொன்றதாக இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கஞ்சா போதையில் வீடு புகுந்து நிகழ்த்திய கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை ராயப்பேட்டை ரோட்டரி நகரில், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரினியாக வாழ்ந்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
பிணகூறாய்வில் அந்த மூதாட்டி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த நிலையில் அக்கம் பக்கத்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருவல்லிக்கேணி நொச்சிக்குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார் என்பவனை காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
கஞ்சா போதையில் சம்பவத்தன்று ரோட்டரி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த வசந்தகுமார், கதவு திறந்து கிடந்ததால் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
வீட்டில் முகத்தை மூடியபடி அசந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை இளம் பெண் என நினைத்து பலாத்காரம் செய்ததாகவும், மூதாட்டி வெளியில் காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தரையில் தலையை அடித்து கொலை செய்து விட்டு நகைக்காக நடந்த கொலை போல இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதையடுத்து கஞ்சா காமுகன் வசந்தகுமாரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் காற்றுக்காக கதவையோ,ஜன்னலையோ திறந்து வைத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
அதே நேரத்தில் 75 வயது மூதாட்டியைக் கூட விட்டுவைக்காத மன நிலைக்கு 25 வயது இளைஞனை தள்ளிய கஞ்சா விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Comments