தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு..! இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு திமுக அழைப்பு

0 2032
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு..! இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு திமுக அழைப்பு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமா நடைபெற்று வருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இன்று பேச்சு நடத்தவருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் வரை திமுக ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, திமுக கூட்டணியில் 30 தொகுதிகளாவது பெற வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அப்போது, தன்மானத்தை விட்டுத்தராமல் தொகுதிகள் கேட்டுப் பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் தருவதாக கூறப்படும் நிலையில், இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் 27 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டுப்பெற முடியும் என்று அழகிரி நம்பிக்கை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ம.தி.மு.க. உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு நடத்த இருப்பதாகத் தெரிவித்தார். கமலுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments