சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு..! அ.தி.மு.க தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு

0 6144
சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு..! அ.தி.மு.க தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே அளித்திருந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு ஏற்கனவே 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments